ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது செல்ஃபி எடுக்க முற்பட்ட ரஷ்ய பெண்ணொருவர் இன்று எல்ல கல்பிங்கயவுக்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய பிரஜையான கிறிஸ்டினா அலக்வானா என்ற 25 வயதுடைய யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாள் பயணமாக ஹிக்கடுவையில் இருந்து எல்ல நோக்கி சென்றிருந்த போதே அவர் இந்த விபத்தை சந்தித்துள்ளார்.
அவரது கடவுச்சீட்டுகள் உள்ளிட்டவை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.