செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன; இத்தாக்குதல் தொடா்வது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சத்துள்ளர்.
ஐ.நா. பொதுச் சபையின் 78ஆவது அமா்வின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ், இந்தியாவுக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாக கடந்த திங்கட்கிழமை(22) சென்றார்.
இதற்கிடையே செய்தி நிறுவனமொன்றுக்கு ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் வழங்கிய சிறப்பு பேட்டியில்,
‘செங்கடலில் தொடா்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன.
இத்தாக்குதல் தொடா்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும்.
செங்கடலில் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினா் உதவுவதுபோலுள்ளது.
எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது.
அதேபோல் காஸா பிரச்னைக்கு அமைதி வழியே தீா்வு.
இஸ்ரேல்-பலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டுமென’ என தெரிவித்துள்ளார்