யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளங்களை இலக்கு வைத்து அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து புதிய வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் நிலத்தடி ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட 8 இடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவுடைய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் ஊடாக பயணிக்கும் ஏனைய நாடுகளின் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வந்தன.
இந்தநிலையில் அந்த கடல் வழியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ச்சியாக கூட்டு முயற்சியில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
பதற்ற நிலையை தணித்து, செங்கடலின் ஸ்த்திரத்தன்மையை பாதுகாப்பதே எமது நோக்கம் என பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 11ஆம் திகதி பிரித்தானியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியில் அமெரிக்க தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், இது இரண்டாவது சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, பஹ்ரைன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.