நுவரெலியாவில் பயிரிடப்படும் மரக்கறிகளில் புரகோலின்,சிவப்பு கோவா,பெஸில் இலை ஆகியவற்றின் விலை உச்சம் பெற்றுள்ளது.
இதனடிப்படையில் புரகோலின் கிலோகிராம் ஒன்றின் மொத்த கொள்வனவு விலை 4,000/= ரூபா தொடக்கம் 4,100/= ரூபாவாகும்.
அதேபோல சிவப்பு கோவாவின் மொத்த கொள்வனவு விலை 3500/=ரூபா தொடக்கம் 3700/= ரூபாவாகும். அத்துடன் பஸ்ஸில் இலையின் கொள்வனவு விலை 3000/= ரூபா முதல் 3100/= ரூபாவாகும்.
கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் (21.01.2023) இன்று கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியலை பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் அறிவித்துள்ளது.
அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த (19.01.2023) திகதி வரை 1700/=ரூபாய் தொடக்கம் 2200/=ரூபாயாக அதிகமாக உச்ச விலையை கொண்டிருந்த கரட்டின் விலை வீழ்ச்சியடைந்து கிலோ கிராம் ஒன்றின் விலை கொள்வனவு விலை 900/= ரூபாய் தொடக்கம் 950/=ரூபாயாக மாற்றம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் கோவா கிலோகிராம் ஒன்றின் விலை 450-470 ரூபாவாகவும், லீக்ஸ் 340- 360 ரூபாவாகவும், பீட்ரூட் 400-420 ரூபாவாகவும், கறிஉருளை கிழங்கு 300-320 ரூபாவாகவும் கொள்வனவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.