Date:

Asian business campus (Pvt) ltd அனுசரணையில் துருக்குராகம முஸ்லிம் மகாவித்தியாலய மாணவர்கள் கெளரவிப்பு

அநுராதபுர மாவட்டம் கஹடகஸ்திகெலிய துருக்குராகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2023 ஆண்டு க.பொ.த சாதரன தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு Asian business campus (Pvt) ltd உயர் கல்வி நிறுவனத்தினால் 18.01.2024 அன்று காலை 10 மணியளவில் பாடசாலை பிராதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் வை.சலாஹுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பாராட்டு விழாவில் Asian business campus (Pvt) ltd உயர் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான தாலிப் அலி முஹம்மது ரஹ்மதுல்லா, மற்றும் Asian business campus (Pvt) ltd உயர் கல்வி நிறுவனத்தின் பொது முகாமையாளரான அலி அக்பர் முஹம்மது மிஸ்பாஹ் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கலன்பிதுன்நுவெவ வலய கல்விப்பணி மனையின் உதவிப் பணிப்பாளர் M.M.Navas அவர்கள் கொளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

க.பொ.த சாதரன தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற 22 மாணவ மாணவிகளுக்கும் 28 ஆசிரியர்களுக்கும் பாராட்டு சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கும் பட்ட அதே வேளை பாடசாலை அதிபர் அவர்களினால் ASIAN BUSINESS CAMPUS PVT LTD உயர் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான தாலிப் அலி முஹம்மது ரஹ்மதுல்லா அவர்களுக்கு பாடசாலை சார்பாக நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்க பட்டதுடன் அவர் துருக்குராகம முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலைஅபிவருத்திக்குழு, பழையமாணவர்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தமைக்கும் Asian business campus Pvt ltd உயர் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான தாலிப் அலி முஹம்மது ரஹ்மதுல்லா அவர்களினால் தனது பிரதம அதிதி உரையில் நன்றி கூறப்பட்டதுடன் பாடசாலைக்கு தேவையான Smart bord ஒன்றினையும் விரைவில் வழங்குவதாகவும் தனது உரையில் தெரிவித்ததுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது சிறப்பம்சமாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை...

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஆளுநர் நசீர் அஹமட்

      வடமேற்கு மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...

இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டு

ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை...

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு?

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க...