Date:

மரக்கறிகளின் விலையேற்றம் : வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு கோரிக்கை !

இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்குமாறு பொதுமக்களிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக தற்போது மரக்கறிகளுக்கு அதிக விலை அறவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, மிளகாய், தக்காளி, பல்வேறு கீரைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கொண்ட வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

விலைவாசி உயர்வுக்காக என்னையும், விவசாய அமைச்சையும் பலர் திட்டுகிறார்கள். கனமழையால் காய்கறி தோட்டங்களில் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதால் பிரசினைக்கு தீர்வு கிடைக்காது.

இதற்கு தீர்வாக வீட்டுத்தோட்டத்தை பராமரிப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...