Date:

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

வற் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைய, 2024இல் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக பெறுமதி சேர் வரி 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சேவை மற்றும் விநியோகத்திற்கான பெறுமதி சேர் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வற் வரி அதிகரிப்பின்றி அதிகளவான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு லங்கா சதொச நிறுவனம் வழங்கவுள்ளது.

அதனடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு சவர்க்காரம், கொலோன், பவுடர், பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை வற் இன்றி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சதொச தெரிவித்துள்ளது
.
இதற்கு மேலதிகமாக லங்கா சதொச நிறுவனத்திடமிருந்து பல அத்தியாவசியப் பொருட்களை நடைமுறையில் உள்ள சந்தை விலைகளை விட மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...