Date:

கெஹலியவுக்கு எதிராக திரண்ட மக்கள் : மலர் வளையங்களும் சடலம் போன்ற உருவங்களுடனும் ஆர்ப்பாட்டம் !

முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது கறுவாத் தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர்.

இதன் காரணமாக கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும், கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்துவதற்கு கலகத் தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் தற்சமயம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கெஹலியவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக் களத்தில் மலர் வளையங்கள், மற்றும் உயிரிழந்த சடலங்களைப் போல உருவங்களை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் சுகாதார துறையில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலியவே பதில் கூற வேண்டும் என தெரிவித்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் கெஹிலிய கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...