Date:

100 ஆவது நாளில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் ! (படங்கள்)

பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் 100 ஆவது நாளாக தொடர்­கின்றன.

கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலின் தென் பிராந்­திய நக­ரங்கள் மீது ஹமாஸ் போரா­ளிகள் ஊடு­ருவி தாக்­கு­தல்­களை நடத்­தினர்.

அதை­ய­டுத்து, ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் யுத்தப் பிர­க­டனம் செய்­த­துடன், ஹமாஸின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களை நடத்தி
வரு­கி­றது.

A defiant Netanyahu says no one can halt Israel's war to crush Hamas,  including the world court - ABC News

இம்­மோ­தல்கள் ஆரம்­பித்து, இன்றுடன் 100 நாட்­க­ளா­கு­கின்­றன.

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்­கப்­பட்ட பின்னர், பலஸ்­தீ­னர்­­க­ளுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான மிக நீண்­டதும் அதிக உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­மான யுத்தம் இது­வாகும்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களால் 23,708 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்ளனர் என காஸா­வி­லுள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த எண்ணிக்கை காஸா­வி­லி­ருந்த மக்கள் தொகையின் சுமார் ஒரு சத­வீதம் ஆகும்.

Live updates | 9 Israeli soldiers killed as ground offensive continues in  Gaza, despite US criticism | FOX40

அதே­வேளை, காஸாவில் சுமார் 80 சத­வீ­த­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களால் இஸ்­ரேலில் சுமார் 1140 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 250 பேர் பண­யக்­கை­தி­க­ளாக பிடிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் இன்னும் 132 பேர் தொடர்ந்து பணயக்கைதி­க­ளாக உள்­ளனர் என இஸ்­ரே­லிய அதிகா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

காஸா­வி­லுள்ள மக்­களில் நான்கில் ஒரு பங்­கினர் பட்­டி­னியால் வாடு­கின்­றனர் என ஐ.நா. மதிப்­­பிட்­டுள்­ளது. காஸாவின் 36 வைத்­தி­ய­சா­லை­களில் 16 வைத்­தி­ய­சா­லை­களே அதுவும் பகு­தி­ய­ளவில் இயங்­கு­கின்­றன என ஐ.நா. தெரி­வித்­துள்­ளது.

Israel war on Gaza updates: Gaza becoming 'uninhabitable' – UN official |  Israel War on Gaza News | Al Jazeera

மாண­வர்கள் பல மாதங்­க­ளாக பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத நிலையில் உள்­ளனர்.

காஸாவில் இஸ்ரேல் இனப்­ப­டு­கொலை செய்­வ­தாகக் குற்­றம்­சு­மத்­திய தென் ஆபி­ரிக்கா, காஸா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறு உத்­த­ர­விடக் கோரி, நெதர்­லாந்தின் ஹேகு நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதிமன்­றத்தில் வழக்குத் தொடுத்­துள்­ளது. இவ்­வழக்கின் ஆரம்ப 2 நாள் பகி­ரங்க விசா­ர­ணைகள் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்­களில் நடை­பெற்­றன.

இவ்­வ­ழக்கில் தென் ஆபி­ரிக்­காவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சட்டக் குழு­வுக்கு, தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த சர்­வ­தேச சட்­டத்­துறை பேரா­சி­ரியர் கிறிஸ்­டோபர் ஜோன்டுகார்ட் தலைமை தாங்­கு­கிறார்.

Measuring the carbon 'boot print' of Israel's war in Gaza - Bulletin of the  Atomic Scientists

இக்­கு­ழு­வினர் சர்­வ­தேச நீதி­மன்ற நீதி­ப­திகள் முன்­னி­லையில் முன்­வைத்த சமர்ப்­ப­ணத்தில், இஸ்­ரேலின் வான்­வழித் தாக்­கு­தல்கள் மற்றும் தரை­வ­ழி­யான படை­யெ­டுப்­பினால் காஸா மக்கள் எதிர்­கொண்­டுள்ள அவ­ல­நிலையை எடுத்­து­ரைத்­தனர்.

பலஸ்­தீன மக்­­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை பயங்கரங்கள் உல­கெங்கும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாகி வரு­வ­தாக அயர்­லாந்து சட்­டத்­த­ரணி பிளின்னே நீ ஹார்லீ கூறி­ய­துடன், காஸாவில் இஸ்­ரேலியப் படை­யி­னரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்கு அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

Israel-Hamas war: List of key events, day 78 | Israel War on Gaza News | Al  Jazeera

இஸ்ரேல் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­­த­ர­ணிகள் தென் ஆபி­ரிக்­காவின் இன அழிப்பு குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தனர்.

இஸ்­ரே­லிய சட்­டத்­த­ரணி டெல் பெக்கர் வாதா­டு­கையில், இஸ்ரேல் தற்­காப்பு நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அந்­ந­ட­வ­டிக்கை காஸா­வி­லுள்ள பலஸ்­தீன மக்­களை இலக்­கு­ வைக்­க­வில்லை எனவும் கூறி­னார்.

ஹமாஸ் இயக்­கத்­தினர், பெற்­றோர்களின் முன்­னி­லையில் சிறார்­க­ளையும் சிறார்கள் முன்­னி­லையில் பெற்­றோர்­க­ளையும் சித்­தி­ர­வதை செய்­தனர், மக்­களை தீக்­கி­ரை­யாக்­கினர், வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் எனவும் அவர் கூறினார்.

NDTV Explainer: Gaza War May Unite Arab Countries Against Israel

இன அழிப்பு குற்­றச்­சாட்டு தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்றம் இறுதித் தீர்ப்பை அறி­விப்­ப­தற்கு பல வரு­டங்கள் செல்லும் எனக்
கரு­தப்­ப­டு­கி­றது.

எனினும் காஸா­­வில் கொலை­­­க­ளை­யும் அழி­வு­க­ளை­யும் நிறுத்­து­வ­தற்கு அவ­சர உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட வேண்டும் என்ற தென் ஆபி­ரிக்­காவின் கோரிக்கை தொடர்­பி­லேயே, நீதி­மன்­றத்தின் ஆரம்ப விசா­ர­ணை­களின் கவனம் குவிந்­தி­ருந்­தது.

இவ்­வ­ழக்கில் இடைக்­கால தீர்ப்பொன்று சில வாரங்களுக்குள் வெளி­யிடப்படலாம் என நிபுணர்கள் தெரி­வித்துள்ளனர்.

Israel-Palestine War: A Global Conflict in The Offing?

தென் ஆபிரிக்க சட்டத்தரணி ஆதிலா ஹசிம் இது தொடர்பாக
கூறுகை­­யில்,

இன அழிப்பு தொடர்­பான இறுதித் தீர்ப்பை இந்நீதி­மன்றம் தற்போது அறிவிக்கத் தேவை­யில்லை. ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள், இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சம­ வாயத்தின் வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றன என்பதை
ஏற்­றுக்­­கொண்டு இதில் நீதிமன்றம் தலை­யீடு செய்ய முடியும் என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373