நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
அதற்கமைய, 1,300 ரூபாவுக்கு காணப்பட்ட கறிமிளகாய் கிலோவொன்று 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கரட் ஒரு கிலோகிராம் 1,200 ரூபாவுக்கும், 500 கிராம் தக்காளி 600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.