Date:

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம் !

இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்க தொடுத்த வழக்க இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்குமாறும் உடனடி போர் நிறுத்தத்தை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது.

பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது.

தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக இடம்பெற்று வரும் இப்போரில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர்.

தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,000-ஐ நெருங்கிவிட்டது.

போரில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்தது.

எனினும், காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகிறது. இந்த வழக்கில் வாதிட சட்டக்குழுவை சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது.

விசாரணைகளில் முடிவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...