உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட பிரிவொன்று பேராதனை வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நோய் நிலைமைகளினால் உயிரிழப்போரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு வைத்தியசாலையின் மருத்துவர்கள் கோரியுள்ளனர்.