Date:

பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான சமிந்த தாப்ரு எனப்படும் பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் பொப்மாலியும் அவரது மனைவியும் அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர்களும் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

விசாரணைகள் நிறைவடையாததால் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு பொலிசார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான் எதிர்வரும் 15ம் திகதி வரை சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துவந்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவின் அரசுக்குச் சொந்தமான...

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...

இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம்...