ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காகச் சென்ற இஸ்லாமியர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த அக் அக்ஸா மசூதி அமைத்துள்ள இடத்தில் யூதர்களின் புனித்தலமும் உள்ளதால் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கடும் கட்டுப்பாடுகளை அங்கு விதித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத்தலமாக அல் அக்சா மசூதி கருதப்படுகிறது.
குறித்த மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இஸ்லாமியர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இருப்பினும் குறித்த பகுதிக்குள் நுழையவிடாமல் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு உள்ளன உம் அக்ரம் கவாஸ்மி என்ற பெண் கூறுகையில்
“என்னை அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள்.
நான் ஒரு வயதானவள். நான் என்ன செய்யப்போகிறேன். நான் உள்ளே சென்று தொழ வேண்டும் அவ்வளவுதான்” எனறார்.