Date:

இலங்கையில் சினோபார்ம் தொழிற்சாலை!

சீனாவின் சினோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி நிரப்பும் தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது.

சீனாவின் சினோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹேன ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பானது கடந்த 7ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இலங்கை மக்களுக்காக சினோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி வழங்கிய கடிதத்தையும் தூதுவர் இதன்போது சினோபார்ம் நிறுவன தலைவருக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சினோபார்ம் நிறுவன தலைவர், சினோபார்ம் நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமென தெரிவித்தார். மேலும் சினோபார்ம் தடுப்பூசியானது 100இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், 50இற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு எவ்விதமான பாதகமான விளைவுகளும் இல்லையெனவும் அதன் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...