பங்களாதேஷின் பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் அரசியல் கட்சி இம்முறையும் ஐந்தாவது தடவையாக வெற்றி பெற்றுள்ளது.
350 ஆசனங்களை கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றதில் 50 ஆசனங்கள் பெண் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (7) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 120 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்களில் பாதி பேர் பெண்கள் எனவும் பங்களாதேஷ் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
நேற்று (7) நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி அரசியல் கட்சிகள் 152 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி, பங்களாதேஷில் 2009ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் 76 வயதான ஷேக் ஹசீனா இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.