Date:

50 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை மக்கள் வறுமையில் !

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால், கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,

நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் இரண்டு கோடி 20 இலட்சமாகும்.

இந்த சனத்தொகையில் வறுமை நிலையில் இருப்போரின் சதவீதம் நூற்றுக்கு 25 ஆக உயர்ந்துள்ளது.

அதற்கமைய, ஜனசவி, சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற வறுமை நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களின் சதவீதம் நூற்றுக்கு 11.9 இல் இருந்து நூற்றுக்கு 25 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

அத்துடன் இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்ட வற்வரி வீதம் நூற்றுக்கு 18 வரை அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் நூற்றுக்கு 27.9 வீதமானவர்கள் 2024ஆம் ஆண்டாகும்போது வறுமை நிலைக்கு ஆளாக நேரிடும் என்பது உலக வங்கியின் கணிப்பாக இருந்தது.

இதுவரை காலமும் வற்வரி விதிப்புக்கு உள்வாங்கப்படாமல் இருந்த எரிபொருள் எரிவாயு போன்ற 79 பொருட்களுக்கு புதிதாக நூற்றுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டதால், நாட்டில் வறிய மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார மற்றும் நிதி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொரளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு...

இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று...

இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு வாகனத்துடன் பறிமுதல்

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு...

ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில்...