Date:

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு !

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது

ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் இந்த பொங்கல் நிகழ்வானது இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் 200 காளை மாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருவதால் இதனை பார்வையிடுவதற்காக பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருகோணமலைக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...