ஜப்பானில் நேற்று (01) பதிவான பாரிய நில நடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சேதங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானின் மத்திய பகுதியில் நேற்றைய தினம் 7.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.
இதனையடுத்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.
இந்தநிலையில் அங்கு இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.