கரையோர ரயில் மார்க்கத்தின் பயண அட்டவணை இன்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ருஹுணு குமாரி கடுகதி ரயில் , இன்று முதல் பெலியத்த தொடருந்து நிலையத்தில் இருந்து காலை 5.25 க்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வார நாட்களில் மட்டும் இயக்கப்பட்ட சாகரிகா கடுகதி ரயில் சனிக்கிழமைகளிலும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், வார நாட்களில் இரவு 8.35 க்கு மருதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை முன்னெடுக்கப்படும் ரயில் சேவை இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, மருதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் ரயில் இன்று முதல் பிற்பகல் 1.55 க்கு பயணத்தை ஆரம்பிக்குமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.