Date:

ஜனவரி முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு !

ஜனவரி முதல் VAT வரி அதிகரிக்கப்படவுள்ளதன் காரணமாக, போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக பாடசாலை மற்றும் பொது போக்குவரத்து சேவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

VAT வரி திருத்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

சுமார் 1,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை அதிகரிப்பது வாடிக்கையாளர்களுக்கு அநீதியான அதே வேளையில், VAT அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...