பொதுமக்கள் இயன்றவரை முகக்கவசம் அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர், தம்பதீவ உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயோஃபில்ம் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக நாட்டின் கொவிட் தொடர்பான உண்மைகளை விளக்கும் நிபுணர் வைத்தியர் ரோஹித முதுகல தெரிவித்துள்ளார்.