தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும் வரை அது தொடரும், எந்த சக்தியாலும் அந்த நடவடிக்கையை நிறுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் நேற்றும் (26) நேற்று முன்தினமும் (25) யுக்திய சுற்றிவளைப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் யுக்திய சுற்றிவளைப்பு இன்று (27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.