எதிர்வரும் சில தினங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகை காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை நிறுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் காரணமாக சிலர் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றி ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா
தெரிவித்துள்ளார்.