யாழ்ப்பாணம் தாவடியை பகுதியைச் சேர்ந்த 11 மாத குழந்தையொன்று டெங்கு நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த 11 மாத குழந்தை நேற்று (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று தற்போது தீவிரமாக பரவி வரும் நிலையில், டெங்கு நோய் தொடர்பில், பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.