Date:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு இன்று விடுதலை !

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு இன்றையதினம்(25) விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்றையதினம் விடுதலை செய்யப்படவுள்ளவர்களில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர்இ ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 12 பேரும், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 25 பேரும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 பேரும் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...