Date:

யானையுடன் மோதி விபத்திற்குள்ளான பஸ் !

தனியார் பயணிகள் பஸ் ஒன்று யானையுடன் மோதி வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானது.

இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயிலுப்பல்லம விதை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெகிராவையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விதை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இருந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்கு செல்வதற்காக வேலியை உடைத்துக்கொண்டு வீதிக்கு வந்தபோது இந்த பஸ் மோதியது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த சாரதி, நடத்துனர் உள்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ்ஸில், “விமான அனுபவத்தை பூமியில் அனுபவிக்க வாருங்கள்” என்ற வாக்கியமும் எழுதப்பட்டிருந்தது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை…

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை...

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில்...

நுரைச்சோலையின் 2 மின்பிறப்பாக்கிகள் செயலழப்பு

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக...

நாவலப்பிட்டியில் குண்டுப்புரளி

நாவலப்பிட்டியில் உள்ள பஸ்பாகே கோரல பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறை உட்பட,...