இலங்கையில் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் கொவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொவிட் தொற்றின் அறிகுறிகளுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த நபருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய, உயிரிழந்த குறித்த நபர் கொவிட் தொற்றால் உயிரிழந்தமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.