Date:

அரச மாடிக்குடியிருப்புகளின் வீட்டுரிமத்தை விரைவில் மக்களுக்கு வழங்க திட்டம் !

அரச மாடிக்குடியிருப்பு வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தை துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் தலைவருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கில் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் கூதெரிவித்துள்ளார்.

காணி உரிமம் வாயிலாக மக்களுக்கு அரச மாடிக்குடியிருப்பு வீட்டு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 2024 ஆம் ஆண்டுக்குள் 2351 வீடுகளுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

காணி உரிமை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள், அதற்கான விடுவிப்பு பத்திரங்கள், சான்றிதழ்கள் தொடர்பிலான பிரச்சினைகள், பிணையாளர் மற்றும் பரிந்துரைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை...

நாடு கடத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்கள்

பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டு, இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று...

ஹையேஸ் வாகனம் மோதி முதியவர் பலி

வவுனியா யாழ்வீதியில் வௌ்ளிக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ...

பேருந்திலிருந்து விழுந்த மாணவன் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து நேற்று (03) மாணவர் ஒருவர்...