செக் குடியரசின் ப்ரக் (Prague) நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உரியிழந்துள்துடன்
25 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கியுடன் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்குள் பிரவேசித்த சந்தேகநபர், துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவர் இந்த தாக்குதலை நடத்தியமைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு பிரவேசித்த பொலிஸார் சந்தேகநபர் மீது பதில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவீன செக் குடியரசின் வரலாற்றில் இது மோசமான சம்பவமாக பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.