கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 145 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் 40 சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான 134 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 154 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையில், ஹெரோயின் 613 கிராம் , ஐஸ் 746 கிராம்
கஞ்சா 16 கிலோ 500 கிராம் , கஞ்சா செடிகள் 272,041 ,
ஹஷீஷ் 263 கிராம் , மாவா – 49 கிலோ 400 கிராம்,
ஹேஷ் – 16 கிராம், மதன மோதகம் 479 கிராம் மற்றும்
போதை மாத்திரைகள் = 3142 கைப்பற்றப்பட்டுள்ளன.