பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸாமில்லின், பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் உள்ள பஸ் நிறுத்துமிடத்தின் கம்பி வேலிக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்த போது, கைத்துப்பாக்கி, ரவைகள் உள்ளிட்ட இன்னும் சில பொருட்களுடன், அவருடைய பயணப்பையை திருடினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நபரொருவரை கைது செய்துள்ளதாக கிருலபனை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 24, மெகஷின் 2, பொலிஸ் விளையாட்டு சீருடை, அமைச்சர் பாதுகாப்பு ஆடை, அமைச்சர் பாதுகாப்பு தொடர்பான அடையாள அட்டை, குறிப்பேடு, பொலிஸ் கான்ஸ்டபிளின் ஆடைகள் சில, சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிக்கொண்டிருந்த நபரை சோதனைக்கு உட்படுத்திய போது, அந்த நபர் வைத்திருந்த பயணப்பையை சோதனைக்கு உட்படுத்திய போதே, இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.