பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகள் இன்று முதல் சதொச நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சதொச ஊடாக மக்கள் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி கொள்வனவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள், முட்டையின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததால், நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து நுகர்வோரின் நலன் கருதி இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.