Date:

இந்தோனேசியா சிறைச்சாலையில் தீ- 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 41 சிறைக் கைதிகள் உயிரிழந்ததோடு, 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த தங்கெராங்க சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1,000 சிறைக் கைதிகள் மட்டுமே அடைக்கப் போதுமான சிறைச்சாலையில் சுமார் 2,000இற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள.

சிறைச்சாலையில் தீ விபத்து இடம்பெற்ற கட்டிடத்தில், 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உடனடியாக அந்த கட்டடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரபல பாடகர் தமித் அசங்க திடீர் கைது

பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்ப தகராறு...

பொத்துவிலில் கோர விபத்து – ஒருவர் பலி, பலர் காயம்

பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோமாரி பகுதியில் பாலம்...

கண்டி – பேராதனை ரயில் சேவைக்கு மட்டுப்பாடு

பேராதெனியவிற்கும், கண்டிக்கும் இடையில் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள்...

நாவின்ன துப்பாக்கிச் சூடு : 39 வயது சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து...