Date:

இந்தோனேசியா சிறைச்சாலையில் தீ- 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 41 சிறைக் கைதிகள் உயிரிழந்ததோடு, 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த தங்கெராங்க சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1,000 சிறைக் கைதிகள் மட்டுமே அடைக்கப் போதுமான சிறைச்சாலையில் சுமார் 2,000இற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள.

சிறைச்சாலையில் தீ விபத்து இடம்பெற்ற கட்டிடத்தில், 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உடனடியாக அந்த கட்டடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...