இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான 4 கஜ முத்துக்களுடன் 4 பேர் சீதுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கஜமுத்துக்களை விற்பனை செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர்கள் இமதுவ, வெலிஓயா, பளுகஸ்வௌ மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, சந்தேகநபர்கள் பயணித்த பாரவூர்தி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்