பொரளை கிரகரீஸ் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
விஜேராமயிலிருந்து தும்முல்லை சந்தி நோக்கி செல்லும் பிரதான வீதியிலேயே குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதனால் குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.