நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகத்தை இரவு 10 மணிக்கு வழமைக்கு கொண்டுவரலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.