Date:

ஒக்சிஜனில் தங்கியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

 மருத்துவ ஒக்சிஜனில் தங்கியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் உரியவாறு பேணுவதால், இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சுகாதார ஒழுங்கு விதிகளை தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி!

இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும்...

டெய்சி ஆச்சி வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Breaking கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அக்குரேகொட படுகொலை ; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியையும் அவரது மனைவியையும் சுட்டுக்...