Date:

பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொற்றா நோய்கள் பலவற்றிற்கு சுதேச வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கும் மொனராகலை ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலை, நாற்பது நோயாளர்கள் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் தங்கி சிகிச்சை பெறும் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட மத குருமார்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படும்.

இந்தநிகழ்வில் தொலைகாணொளி ஊடாக உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னோர்கள் பாதுகாத்த, சுதேச சிகிச்சை முறைகளை அவ்வாறே எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாத்து கையளிப்பது போன்றே அதனை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நீரில் மூழ்கிய நுவரெலியா! | 4 பேர் உயிரிழப்பு!

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம். நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற...

சீரற்ற காலநிலை | அவசர நிலைமைக்கு அழைக்க தொலைபேசி இலக்கம்!

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற...

சீரற்ற காலநிலை | உயிரிழப்புக்கள் 31 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31...

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் | நடைபெறும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...