51 வீத வாக்குகளைப் பெற முடியும் என அரசியல் கட்சிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்குமாயின், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாரென பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அதனை உறுதிசெய்ய வேண்டும் என நியூஸ்பெஸ்ட் வினவிய போது அவர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 55 இலட்சம் குடும்பங்களில் 11 இலட்சம் குடும்பங்களிலுள்ள 15 இலட்சம் பிள்ளைகள் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட DP Education திட்டத்தினூடாக பயனடைவதாக தம்மிக்க பெரேரா இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW