இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.
இந்த பதில் தாக்குதலில் 230க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.
பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆய்ஹதக்குழுவினரும் இடையே குறைந்தது 22 இஸ்ரேல் இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.
யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பதிலடி தாக்குதல்களுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் 230க்கும் மேற்பட்ட காசா மக்களும் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW