கொழும்பின் சில பகுதிகளில்இன்று (07) சனிக்கிழமை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் விநியோகக் கட்டமைப்பின் மேம்பாட்டுத் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை மேலும் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW