இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றும் தர்ஷன ரத்நாயக்க, இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதங்களை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW