Date:

நாட்டின் நிலைமை ஆபத்தானது! எந்தப் பிரச்சினையும் இல்லாது போல் அரசாங்கம் செயற்படுகிறது – சஜித்

லிட்ரோ எரிவாயு விலையை 343 ரூபாவால் அதிகரித்தல்,நீர் கட்டணத்தை அதிகரித்தல்,
மின்சார கட்டணத்தை 3 ஆவது முறையாகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ள சூழ்நிலையால் நாட்டு மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை விரிவாக்குவதற்கு பதிலாக பொருளாதாரத்தை சுருக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பதால் மக்களின் வருமான மூலங்கள் குறைந்துள்ளன என்றும்,இதனால் மக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ள தருணத்தில் எரிவாயு, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (5) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பணவீக்கம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும்,நாட்டில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும்,
கடந்த 12 ஆண்டுகளில் 3765 யானைகள் இறந்துள்ளன என்றும்,கடந்த 9 மாதங்களில் 291 யானைகள் உயிரிழந்துள்ளன என்றும்,
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 20 யானைகள் உயிரிழந்துள்ளன என்றும்,
இது வனவிலங்கு சார் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அழிவு என்றும்,வன ஜீவராசிகள் அமைச்சின் வாடகை கூட செலுத்தப்படாத சூழலில் லிப்ட் கூட செயலிழந்துள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த 48 மணி நேரத்தில் 11 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும்,அவர்களில் 5 சிறார்களும் உள்ளனர் என்றும்,வைத்தியர் விராஜ் பெரேராவின் கருத்துப்படி இந்நாடு போதைப்பொருள் சொர்க்கமாக மாறி Zombie Drugs என்ற புதிய போதைப்பொருளும் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் பிரகாரம்,10 இலங்கையர்களில் 6 பேர் ஆபத்தில் உள்ளனர் என்றும்,221 இலட்சத்தில் 123 இலட்சம் பேர் ஆபத்தில் உள்ள வேளையில்,அரசாங்கம் எந்தப் பிரச்சினையும் இல்லாது போல் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமைச்சரவை என்ற ரீதியில் மனசாட்சிக்கு உடன்பட்டா இந்த எரிவாயு விலையை அதிகரித்தீர் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,மக்கள் பக்கம் நின்று செயற்படுமாறும் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...

தங்கத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை...