Date:

நாடு திரும்பினார் தனுஷ்க குணதிலக்க – உடன் வந்தது காதலியா?

“ஆஸ்திரேலியாவில் தனக்கு எதிராக முறைப்பாடு செய்த யுவதிக்கு எதிராக அந்நாட்டு சட்டத்துக்கமைய சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளேன்.”

இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக்க, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவ்வாறு கூறினார்.

” ஆவுஸ்திரேலியாவில் சட்டம் வேறு, அப்பெண் பொய் சொல்லியிருந்தாலும், அவரிடமிருந்து நட்டஈட்டை பெற முடியாது. என்னுடைய சட்ட வல்லுநர்கள் சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளனர்.

நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட எதிர்பார்த்துள்ளேன். பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன். என்னை நம்பிய , எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ” – என்றார்.

அதேவேளை, உங்களுடன் வந்த, ஆஸ்திரேலியாவில் கைகோர்த்து வந்த யுவதி யார் என எழுப்பட்ட கேள்விக்கு,

“நீங்கள் யாரென நம்புகின்றீர்கள் என ஊடகவியலாளர்களிடம் அவர் கேட்டார்,”

” காதலி” என நினைக்கின்றோம்” என ஊடகர்கள் பதிலளித்தனர்.

” அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் தனுஷ்க குணதிலக்க.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...