வெலிபென்ன பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த இந்திய பிரஜையொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.
குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் அவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் இரு இந்திய பிரஜைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW