Date:

மலசலகூடத்திற்குள் வலி நிவாரணி மாத்திரைகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூன்று சந்தர்ப்பங்களில் இவ்வாறான வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த சந்தேகநபர்களான குடு சலிந்து மற்றும் ஹரக் கட்டா ஆகியோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறைக்கு அருகிலுள்ள மலசலகூடத்திலிருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மேலதிக பரி​சோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச்சென்ற கான்ஸ்டபிள் தங்கியிருந்த காவலரணில் போதைப்பொருளுக்கு நிகரான வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தகவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் Milk Tofee தேநீருடன் குறித்த மருந்துகள் கலந்து வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கான்ஸ்டபிள் தலைமறைவாகியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் விரான் சமுதித்த சாதனை

இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192...

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியானது

காசாவின் அமைதிக்கான சபையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்க...

விபத்தில் சிக்கிய அசோக ரன்வலவின் மனைவி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...