நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளது.
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.
இந்த வருடம் 70 வீதமான பாடசாலை சீருடைகளை சீன அரசாங்கம் வழங்கியிருந்ததாகவும் அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை சீருடைகளையும் வழங்க சீனா இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்;.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW