Date:

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்

பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

ஹிந்தி பிக் பாஸ் 13-ம் பருவ நிகழ்ச்சியை வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளளார் , இரு படங்களில் நடித்துள்ளார். 2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2014 ல் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் மரணமடைந்துள்ளார் சித்தார்த் சுக்லா. அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சித்தார்த் சுக்லாவுக்கு தாயும் இரு சகோதரிகளும் உள்ளார்கள்.

சித்தார்த் சுக்லாவின் மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த காத்தாண்குடி மத்திய கல்லூரி! குவியும் வாழ்த்துக்கள்!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின்படி, வர்த்தகப் பிரிவில்...

காலியில் இரு ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில்...